Thursday, 21 January 2016

யூகிமுனிவர் சுருக்கம் - 100

யூகிமுனிவர் அருளிச் செய்த சுருக்கம் – 100


இதனை யூனானி வைத்திய போதினி முதலிய பல  வைத்திய நூற்களின் கிரந்த கர்த்தாவாகிய ஹக்கீம்
பா. முகம்மது அப்துல்லா சாயபு
அவர்கள் சில அனுபந்தத்துடன் அச்சிட்டனர்
சென்னை
யூனானி வைத்திய
கலாநிதி அச்சுக்கூடம்
1903



REGISTERD 


---------- 
கைவிலை அணா – 2                                         வி-பி அணா – 4   




யூகிமுனிவர் அருளிச்செய்த சுருக்கம் – 100
நூலின் முகவுரை 
     இரசவாத சாஸ்திர சகோதரர்களே! இச் சிறிய கிரந்தத்தை அச்சிட நேரிட்ட காரணம் பின் வருகிறவிதமாம். அடியேனால் வெளிப்படுத்தப்பட்ட இரசவாத சிந்தாமணியின் முதல் இரண்டாம் பாகங்களாகிய இரண்டையும் வாங்கி அவற்றிற் சொல்லப்பட்ட நானாவித முறைகளையும் ஆங்காங்கு கண்டிருக்கிற வகை விபரத்துடன் செய்து சித்தி பெற்று ஆனந்தித்து வரும் நண்பர் பலர் கடித முகத்தாலும் பிறவற்றாலும் அதை எமக்கரிவித்து மேற்படி இரசவாத சிந்தாமணியின் மற்றப் பாகங்களையும் கூடிய சீக்கிரம் அச்சிட்டு வெளிப்படுத்தும் படி வற்புறுத்தி வருகின்றனர்.
     ஆனால் அடியேனுக்கு அடிக்கடி நேரிடும் பற்பல வகையான குடும்பத் தொல்லையாலும் வேறுவகை அசந்தர்பங்களாலும் ஆதரித்து வரும் கனவான்களின் கோரிக்கையை அவர்களிஷ்டப்படி உடனுக்குடன் நிறை வேற தடைப்படுத்தப் பட்டவனாயுலும் கடவுளினது இருமையாலும் பெரியோர்களின் ஆசிர்வாதத்தாலும் பற்பல பண்டித சிரோன்மணிகளின் அனுக்கிரகத்தாலும் மேற்கண்ட மற்ற பாகங்களையும் வெளிப்படுத்த பிரயத்தனங்கிலேயே கவலை உள்ளவனாய் முயற்சி செய்து வருகிறேன். ஆனால் இதற்கிடையில் இரசவாத சாஸ்திரத்தில் அனுபவ சித்தி மிகுந்த ஒரு பெரியாவரின் தரிசனம் கிடைத்தது.
     இரசவாத சாஸ்திரத்தில் அவருக்கிருக்கும் பாசா ஞானம், வியாக்கியா ஞானம்,கைபாகம் செய்பாகம் புடபாகம் முதலியவைகள் மிகவும் வியகத்தக்கவைகள் அம மகான் இவ் ஏழையின் மீது கிருபையும் பாசமுள்ளவராய் அதிகப் பிரியத்துடன் அன்பு பாராட்டி வந்தனர். அவர் அதிக சந்தோசமாக இருக்கும் சமயத்தில் இரசவாத சாஸ்திரத்தில் சுருக்கமாகவும் கூடியவரையில் தெளிவாகவும் தங்களுக்கு அனுபவமானவும் ஒரு நூலை வெளிப்படுத்தினால் அந்த சாஸ்திரத்தில் பழகி வருபவர்களுக்குப் பிரயோசனமாயிருக்கும் எனப் பிரேரேபித்தேன். அந்த மகான் அடியேன் வார்த்தையை உடனே ஆமோதித்துப் பின் வருகிறபடி சொல்லி இதனை அனுகிரகஞ் செய்தனர்.
     இதிற் சொல்லப்பட்ட முப்பு முறைகள் தமக்கு கைவல்லியமானவைகலாம். உண்மையான மகன்கள் பலரிடம் இருந்து கைபாகத்துடன் தெரிந்து கொண்ட குறு முறைகள் இச் சிறு கிரந்தத்திற் சொல்லப் பட்டவைகளேயாம். இச் சுருக்கத்தில் தெளிவாயும் விபரமாயும் சொல்லி இருப்பது போல வேறெந்த சாஸ்திரங்களிலும் சொல்லப்படவில்லை.. பல சாஸ்திரங்களிலும் அவை பரிபாசையாகவே சொல்லப்பட்டிருப்பதால் அவற்றை எல்லோரும் அறிந்து கொள்வது துற்பலமாம். அப்படிக்கில்லாமல் இச் சிறு நூலில் மறைவின்றித் தெரியும் விதமாய் சொல்லப்பட்டு அனுபவத்திற்கும் ஒத்திருப்பதால் லோகொபகாரமாய் இருக்கும் படி இந்தச்சாஸ்திரத்தை அச்சிட்டு வெளியிட அடியேனுக்கும் கட்டளை இட்டனர். அவர் கருத்துப்படியே இதனை வெளியிடலாயிற்று. இதிற் சொல்லப்பட்ட முறைகள் மகா உன்னதமானவைகலாகவே காணப்படுகின்றன. ஆனால் இவ்விஷயத்தில் அனுபவ சித்தி பெற்றவர்கள் இதன் உண்மையை அறிந்து கொள்வார்கள்.
      ஆகையால், லோகோபகார சிந்தையுள்ள இம் மகானுக்கு அடியேன் இருதய பூர்வமாகக் கைக் கொண்டு ஆழ்ந்த கருத்துடன் கையாண்டு அனுபவ சித்தி பெரும் ஒவ்வொருவரும் அப்படியே நன்றி உள்ளவர்களாய் இருக்கும் படி சர்வதயாபரக் கடவுள் உதவி புரிவாராக ஆமீன்.
*************************************************************************************************************************
கடவுள் துணை
முப்புவின் பெயர்
வழலை,அண்டம்,பிண்டம் இடிகளை, சுழிமுனை, பிங்கலை, அம்பு, ஏறி, பரிதி, மதி, வில், அறிதாராம், இடி, இரண்யகர்ப்பம், இறையம், கோசம், கெளரி, தனித்தியம், பீசம், மேகம், வாயு, அமுரி, உரிஉவர், உவர்மண், கடுக்காய்,சிகை சுண்ணம், தசைநஞ்சு திரிகுண ஜலம், நஞ்சு, நாதம், பாஷனம், பூமினாதம்,வயிரம், விந்து, அடி, அமாவாசை, அரக்கி, ஊனுப்பு, ஐம்பத்தொன்று, கணபதி, கம்பி, கருநெல்லி, கிரகம், குயவன், கொல்லி ஓடு, நவமூலி, நீருப்பு, பிரதமை, பூநீர், மிதுனம், முடி, மேடம், லவணம், வண்ணான், விஷமி, விஷம், வெடியுப்பு, வெண்சாரை, அனாமி, எழுபிறப்பு, ஐவர், ஓசை, கண்மணி, கதிர், கமலம், காமி, குடிப்போம்வீடு, கூற்றன், சாரி, சிங்கி, சுடர், சுட்டால், சுயம்பு, சூடன், நாயகம், நிலப்பூடு, நீரன்னாம், பச்சை, படிகம், பிள்ளை, பரமன், பிடாலவணம், புஷ்டி, பொட்டல், மடையன், மனற்பொடி, மலம், மவுனம், மாசி, முயல், லிங்கம், விஷ்ணு, வெடி, வெளி, அக்கினிக்கட்டி, அங்கி, அயம், அவுரி, இந்திரகோபம், இரசம், இராசவர்க்கம், உரம், உருளை, ஏகசவுக்காராம், ஓமம், ஒளி, கடல்பாசி, கண்டங்கத்திரி, கண்ணாடி, கத்தம், கரடு, கரந்தை, கரும்பூனை, கருவி, களிச்சுண்ணம், கனல், கணலுப்பு, கன்னி, கன்மம், காரீயம், காவி, குங்குமம், குறு, குருத்து, கொக்கு, கொச்சி, கொடி,கொன்றை, கோழை, கோமயம், கோரோசனை, சங்கமம், சங்கு, சந்நியாசிமண்டை, சமாதி, சரபீசம், சர்ப்பம், சாலக்கிராமாம், சிங்கு, சுக்கான், சுத்தம், சூக்குமம், சூலம், சொறி, சோடம், சோதி, சோமநாதம், தலைப்பிள்ளை, தாது, திருமேனி, துத்தி, துருசு, தூலம், தேர்க்கால், தொட்டி, நண்டோடு, நந்தி, நாகம், நிலவுப்பு, பஞ்மித்திரம், படலம், பரம், பரி, பாலை நிலம், புத்தான், புரியட்டம், புனுகு, பூரம், பூரணம், பொன்னுமத்தைவித்து, மரம், மதனப் பூண்டு, மதி, மந்திரம், மலைருது, மின், மீனம், முட்டை, மூத்தான், யானைக்கல், ரவி, வங்கு, வலியன், வள்ளி, வாசி, வியாக்கிரம், விருட்சம், வெண்கண்டர், வென்காராம், வெள்ளையவரை, என்னும் இவை தொண்ணூற்றாறு நாமங்களாம்.

தீட்சை நீரின் பெயர்
அண்டநீர், அகாரநீர் அப்பு, அமுதம் அமுரி, அருக்கன் பால், அறுவகை நீர் ஆற்றுவெள்ளம், இளங்குமரிநீர், உகாரநீர், உதகம், உப்புநீர், ஊசிநீர், ஐவேரலி நீர், ஒகாரநீர், கங்கை, கருநீர், சிவந்த நீர், கழுதை நீர், கள்ளு, கண்ணிருது, காக்கைநீர், காந்தமல ரொட்டிநீர், காரநீர், கிளிஞ்சில் நீர், குதம்பை நீர், கும்பிமுகல்நீர், குருதி, கேங்கைநீர், கெர்ப்பநீர், சத்திநீர், சம்பழச்சாறு, சரஸ்வதி  தீர்த்தம், சருகுநீர், சாராயம், சிப்பி நேர், சிவா தீட்சை நீர், சுத்த கங்கை, சுரோணிதம், சுண்ணநீர், செந்தேன், ஜெயநீர், சையோகநீர், சோடசநீர், சோமநீர், கோரி, தசமநீர், கண்ணீர், தயிலம், தாளிச்சாறு, திராவகம், திரிபுரை, தீநீர், தூபநீர், தூமை, சுத்தநீர், நவச்சார நீர், பாணிநீர், நாதம், பாலை நீர் பஞ்சதீநீர், பழச்சாறு,   பிரணவநீர், பிவாகம், புகை நீர், புவனை, பூச்சாரநீர், போகாப்புனல், மதநீர், மதிநீர், மது, முலைநீர்,முல்துளிர், மூலப்புளிநீர், மேனிப்பால், வண்டு, வஸ்து நீர், வாலைநீர், வெண்ணீர், வேசரிநீர், வேர்வை, யோகதீட்சை நீர், ரீங்க்காரா நீர், முதலியவைகளாம்.
கடவுள் துணை
யூகி முனிவர் அருளிச்செய்த சுருக்கம்  நூறு
ஆதிசிவன் தன்பாத முமையாள் பாதம்
ஆதியாம் கணேசனுடன் பாதம் முருகன்பாதம்
வாதியாம் பதினெட்டுச் சித்தர்பாதம்  
வடிவான ரிஷிபாதம் போற்றிசெய்து
நீதியாய்ச் சகல நூல் தன்னைத் தானும்
நிர்ணயமாய்த் திரட்டியே யிந்தநூலைப்
பாதிமதி யணிந்த பரனருளினாலே
பகர்ந்திட்டேன் பார்த்திட்டால் வாதமாமே

பாடல் - 1

வாதமேசிவந்தானுந்  தேவிக்குச் சொல்ல
வகையான தேவிதாநந்திக்குச் சொல்ல
நீத்தமாய் நந்திதான் அசுவினிக்கு
நிச்சயமாய்ப் போதிக்க அவர்கடானும்
காதலாய் அகஸ்தியருக்கு முபதேசிக்க
கசடன்றி அகஸ்தியரும் புலஸ்தியருக்கு
வேதமாய்ச் சொல்லி விட்டார் புலச்தியர்தானும் 
விநோதமாயும் கொண்டார் கருத்தாற்றானே

பாடல் – 2

கருத்தாக புலத்தியரும் தேரையருக்குச் சொல்ல
கனிவான தேரையரும் சந்தோசித்து
பெருத்த யூகிமுனிக்கு பதேசித்தார்
பெருமையா ய்லோகத்தோர் பிழைக்க வேண்டி
நறுத்தாக வாயுர்வே தத்தைதானும்
நலமாகத் தீட்ச்சை விதி யைந்நூற்றுக்குள்
உரித்தாகப்பாடினே னுவமையாக
உண்மையிது வென்நூலையுகந்துபாரே

பாடல் – 3

உகந்துபார் வாதகான்டம் இரண்டிற்றானும்
உகமையாய்க் களங்குவகை லகுவாய்ச் சொன்னேன்
பகர்ந்துபார் தீட்சைவிதி யைந்நூற்றுக்குட்
பதிவாகசவுக்காரச் சுண்ணம் சொன்னேன்
தகுதிபார் சவுக்காரச் சுண்ணம் வைத்துத்
தக்கதொருகளங்கு வகை செந்தூரங்கள்
தொகுதிபார் சேர்த்தரைத்தால் வாதமாகும்
துடியாகப்பாகமதைச் சரியாய்ப்பாரே

பாடல் – 4

பாகமாய்ச் சவுக்காரச் சுன்னத்தொடு
பதிவானகல்லுப்புச் சுண்ணமாக
ஆகமாய்க்களங்குவகை செந்தூரமார்க்கம்
அடைவான திராவகமும் கெந்திச்செம்பு
யோகமாய்க் காரியச் செம்புமார்க்கம்
உண்மையாய்நா கத்தின் ஜெயநீர்மார்க்கம்
பாகமாம்சங்கத்தின் திராவகத்தின் மார்க்கம்
பரிவாகவேடுத்துமே சொல்வேன்பாரே
பாடல் – 5
சொல்லவேகயவரெல்லாம் மோதலாச்சு
சுகமான சவுக்காரச் சுன்னத்தாலாச்சு
மெல்லவே தூர்த்தருக்குக் தோன்றாதப்பா
விரும்பினால் நினைவுக்குள் வந்து தோன்றும்
கல்லவே சவுக்கார சுன்னத்தாட்டுக்
கனிவான சதாசிவனும் காணார் காணார்
நல்லவே நந்தியுமே கேட்டுக் கொண்டார்
நான் கண்டு தீஷையிலே சொன்னேன்பாரே
பாடல் – 6
பாருமே சித்தரெல்லாஞ் சவுக்காரத்திற்
பதிவான பூநீரையளந்து விட்டு
நேருமே மூத்திரத்தை யூற்றச் சொல்லி
நிலவரமா யென்னைவிட்டுச் செய்யச்சொல்லி
காருமே சுன்னத்திற் றாளிக்கச் சொல்லி
கனிவுபெற மறைவாகச் சொல்லிப் போட்டார்
நாறுமே சவுக்காரங் கேட்டுப் போச்சு
நலமான வழலை யென்ற நாமம் போச்சு
பாடல் - 7
நாமென்ன சொல்லுகிறேன் பூமிநாதம்
நலமான முதல் வழலை சுக்கானாச்சு
காமமென்ன வதிலிருந்து பூநீர்வந்த
காரனத்தார் சவுக்காரச் சுன்னமாச்சு
வாமமென்ன சுக்கானை நீற்றிப் போட
வகையாகக் கடுஞ்சுன்னம் சுக்கான் சுண்ணம்
தாமமென்ன பூநீரில் சேர்ந்த போதே
தகமையறவே வெகுகாரமாச்சு தானே
பாடல் – 8
ஆச்சுதே மாதவிடாய் முறிந்து போச்சு
அப்பாலே சொல்லுகிறேன் உற்றுக் கேளு
வாச்சுதே கல்லுப்பில் சேர்ந்தபோது
வாச்சுதே கல்லுப்பும் கொடியசுன்னம்
தாச்சுமே சரக்கெல்லாம் நீற்றுக் கட்டும்
தடையின்றி வாதமெல்லா ஏவல்கேட்கும்
காச்சுதே அத்திமரம் போலேயாகுங்
கனிவான வாதந்தான் கைக்குள்ளாமே
பாடல் 9
வழலை   
உள்ளாக வழலை யொன்று சொல்லக்கேளு
உற்றுமே பார்த்திடவே சித்தியாகும்
கள்ளமே யில்லையையா சொல்லக்கேளு
காரியமாம் இலகுவாகு மிதுதான் பாரு
துள்ளமாம் வெயிலுக்குள் பூமிநாதம்
துடியாக வகைவகையாய்ப் பொங்கி நிற்கும்
உண்மையாய் மஞ்சளிலே சிவந்து போகும்
முடிவான பூநீரு பூர்க்கும்பாரே
பாடல் – 10
பூர்க்குமாம் சித்திரை வைகாசிக்குள்ளே
பூரணமாம் வேகுசுருக்கு பூர்க்கும் பாரு
ஆர்க்கமாம் பூநீரு பதக்கு வாரி
அன்பாக சுக்கானை யூதிக்கொண்டு
ஏற்கவே சுக்கான்னீர் பதக்குவாரி
எழிலான பாணிதானெட்ரட்டி
தார்க்கமா யூத்தியே சுக்கானைத் தான் 
தடையற்று ஊத்தியே கரைத்துக் கொள்ளே
பாடல் - 11
கரைத்துமே பூநீரும் போட்டுப்பாரு
கனிவாகக் கொதியிட்டு திரிநாள்வைத்து
நுரைத்துமே தெளிவித்தான் பார்க்கும்போது
நலமாக மஞ்சள்மேற் றோன்றும் பாரு
நுரைத்த தெளிவிருத்து பீங்கானிலிட்டு
நலமான குழம்பாகக் காய்ச்சிக் கொண்டு
தரைத்துமே கல்லுப்புப் பலமும்நாலு
தடையரவே எடுத்ததுமே சொல்லக்கேளே
பாடல் – 12
கல்லுப்புச் சுண்ணம்
சொல்லவே கல்லுப்புக் கட்டியாக
சுருதியாய்ப் பலம்னாலு எடுத்துக் கொண்டு
நல்லவே சுண்ணாம்பு படிஇரண்டு
நலமான சட்டியிலே பாதியிட்டு
கல்லவேயதின் மேலே கல்லுப்பைவைத்து
கணிவாகவதின் பேரில் சுண்ண மூடி
வல்லவேயதின் பேரில் சட்டியாலே
வலமாக மூடியே சொல்லக்கேளே
பாடல் – 13
கேளுமே பெரும்புடமாய் வைத்துப் பாரு
கிருபையாய்க் கல்லுப்பின் கசிவுபோகும்
ஆளுமே கல்வத்திலிட்டுக் கேளு
அட்வான சவுக்காரக் குழம்பைவிட்டு
தாலுமே யரைத்துமே வில்லை தட்டி
தடையரவே யுலரவைத்துத் கீழ்மேலிட்டு
மதிப்பாக வைத்தெருவிற் புட்டத்தை போடே
பாடல் – 14
போட்டுமே பார்த்தவுடன் வெள்ளையாகும்
போக்கொடே சவுக்காரக் குழம்பைவிட்டு
காட்டுமே எரித்து முன்போற் போடே
கடுமையாம் முப்புவேன்ர பேருமாச்சு
வாட்டுமே சகலதுறை யிதுக்குள்ளாச்சு
வகையாக நீற்றினமுமிது வேயாச்சு
காட்டுறவே சவுக்கார மிதுவேயாச்சு
தடையறவே வழலை யென்றசுன்னமாச்சு
பாடல் – 15 
சுனனமென்ற சவுக்கார சுன்னத்தோடு
சுகமாக வீரத்தை நாலுக்கொன்று
கள்ளமாய்ச் செர்த்தரைத்துக் கொள்ளத்தானும்
கலிகூற ரத்தம் போற்சிவந்து காணுமே
நன்னயமாய் காய்ச்சினதோர் குலம்பினாலே
நலமாகவிட்டரைத்து வில்லை தட்டி
பின்னமாய்க் கர்சுன்னம் கீழ் மேலிட்டு
பிசகாமற் புடம் போட்டு மெடுத்துப்பாரே
பாடல் – 16
எடுதிடவேயிப்படியே யைந்துதிரம் போட
விதமான வீரத்தைச் சேர்த்துச் சேர்த்துச்
அடுத்துமே புடம் போட்டு மெடுத்துக்கொண்டு
அடைவாக சவுக்கராங் கடுமையாச்சு
கடுத்துமே கடுங்கார மெத்தவாகும்
கடுமையான சவுக்காரச் சுன்னத்தாலே
விடுத்துமே சகலமுந்தான் சுன்னாமாகும்
விதமான சுன்னத்தின் போக்கைக் கேளு
பாடல் – 17
போக்கென்ன சொல்லுகிறேன் மத்த
பெருமையாய் சவுக்காரம் பழமெடுத்து
வாக்கென்ன சொல்லுகிறேன் நாலில்லொன்று
வகையான வீரத்தை நிறுத்துப் போடு
நாக்கென்ன சொல்லுமே சொல்லக்கேளு
நலமான சவுக்கார குழம்பினாலே
தாக்கென்ன வரைத்துமே வெள்ளீயத்தில்
தடயறவே பலந்தகட்டிற் கவசங்கட்டே
பாடல் – 18
கட்டியேகாயவைத்துப் புடமே போடக்
கனமானவங்கமது நொறுங்கிப் போகும்
தட்டியேஎடுத்துமே கல்வத்திலிட்டுத்
தடயறவே சவுக்காரக் குழம்பினாலே
முட்டியேயரைத்துமே மூன்று புடம் போட
முயற்சியாய் வெள்ளீயஞ் சுன்னமாகும்
வட்டியே வெள்ளீயஞ் சுன்னத்தாலே
வகையான துரிசுதாநீரும் பாரே
பாடல் – 19
நீறானவெள்ளீய நீறுனாலு
நிலையானவீரமது ஒன்றுகூட்டி
ஆறான சவுக்காரக் குழம்பினாலே
அதட்டியே யரைத்துமே துரிசுமேலே
காராகக் கவசமிட்டு ரவியிற் காய
கனமான குக்குடத்தின் புடத்தைப்போடு
தாராகக் கடுஞ்ச்சுன்னம் துரிசுமாகும்
தடையரவே பசிக்காத சுண்ண மாச்சே
பாடல் - 20
சுண்ணமா மதயானை சுன்னாமாச்சு
சூட்சமாம் யானையென்ற சூதராசன்
நன்னயமாய்க் கட்டியே மணியுமாகும்
நலமாணவாதந்தான் ஏவல் கேட்கும்
கன்னல் போற்றலைக்கமுது கைக்குள்ளாக்கும்
கனமானவாதவித்தை யெளிதிலாகும்
இன்னிலத்திற்  பெரியோரயிருந்து வாழ்வா
இதமான துரிசியினா லெல்லாமாமே
பாடல் - 21
ஆமென்று துரிசிநீர் பணவெடை எடுத்து
அன்பாக விராலியிலை தன்னிலிட்டுக்
காமென்று பிசைந்துமே மூன்றுநாள் வைத்துக்
கனிவாகப் பிசைந்துவரக் கரண்டியிட்டு
தாமென்று சூதமது பலமுமிட்டு
தாக்கியே ஓடவே காச்சிப்போடு
வாமென்று விட்டலி போற்சூதமாகும்
வடிவான சூதத்தின் மார்க்கங்கேளே
பாடல் - 22
மார்க்கமாய் மத்தங்காய் தன்னில்வைத்து
மயமாகப் புடம் போட மதியை போல்
ஏர்க்கவே கரியிலிட்டே யுரிக்கிப்பாறு
இதமான கரியிநின்றே யுருகியாடும்
ஆர்க்கமாய் எடுத்ததுமே வைத்துக் கொண்டு
அடைவாக வாதத்தை யாரியக்கேளு
வேர்க்கவே ர்ஹங்கமொன்று நாகமொன்று
விருப்பமா யுருக்கியே முகத்திற்றானே
பாடல் – 23
தானேதான் பூதமொன்று கொடுத்துருக்கித்
தப்பாமற் களங்காகும் செம்புநூறில்
வாநேநீ ஒன்ரிடவே மாத்து பத்து
வகையான வாதந்தான் இதுவே மார்க்கம்
கானே தான்சிந்தூரம் பண்ணியுன்று
காயசித்தியேமசித்தி கனத்திலாகும்
தானேதான் நினைப்பிருந்து செய்யவேணும்
தடையற்ற சிறுபிள்ளை யாகும்பாரே
பாடல் – 24
பாருமே வழலைவிட்டால் பூநீர்தானும்
படியாக பூநீரிற்ரான் எண்ணெய் போகா
காருமே படிப்படியாய் ஏறமாட்டார்
கனமான குருமுரையும் செய்முறையுமில்லை
வாருமே பேய்க்கூத்தால் சுட்டுக்கெட்டு
வடிவான அடியிநின்று தத்திஏறு
தாருமே நுனிமரம் ஏறித்தேறு தாக்குமே
வழலை விட்டால் விழலாய்ப்போம்
பாடல் - 25  
விழலாய்ப் போகாமல் வழலை பாரு
விருப்பமாய் பின்னாலே பூநீர்பாரு
அழலாக வதின்பின்னே வங்கம் பாரு
அடுத்துமே யதின்பின்னே துரிசுபாரு
நிழலாக வத்தின் பின்னே சூதம்பாரு
நிலைத்துமே யதன்பின்பு தங்கநாகம்
தழலாகக் கலங்க்காகும் எடுத்துக் கொள்ளு
தாக்கிடவே தங்காமாம் செம்புதனே
பாடல் – 26
தானென்ற சவுக்கார வள்ளியின் பேர்
தப்பியே தெரியாமற் போனார் கேளு
வானின்று வண்ணானைக் கேட்டுக் கொள்ளு
வடிவான வன்னாந்தான் சொல்வான் பாரு
ஊனென்ற அவர்மன்னும் சுன்னமென்பான்
உறுமே இவை ரெண்டும் எடுத்துக் கொள்ளு
காணென்ற நீர்ரினங்கள் வந்த போது
கடுமையாய் இதைவிட்டுமறைத்துக் கொள்ளு
பாடல் – 27
அரைத்துமே புடம்போட எல்லாஞ்சுன்னம்
அறிவுகெட்ட வாதிகளே யென்ன சொல்வேன்
முறைத்துமே திறந்தாலோ என்னலாபம்
முக்கியமாய் சவுக்காரம் வைத்துக் கொண்டு
சிரித்துமே சொல்லாதே யொருவரோடே
சொன்னாக்காற் பலனில்லை வாதமார்க்கம்
தரித்துமே சவுக்கராச் சுன்னாம் வைத்து
தரிப்பாகச் சரக்குகளை நீற்றுக் கொள்ளே 
பாடல் – 28
கொள்ளவே சரக்கெல்லஞ் சொன்னபடிகேள்
கொடுமையாய்ச் சொல்லாதே கட்டைப்பாறு
விள்ளாதே யொருவருக்கும் சொல்லிடதே
விருப்பமாய் வழலை யென்னற கல்லைபாறு
உள்ளபடி யெல்லாமே சித்தியாகும்
உறுதி மெத்த வயித்தியத்தியத்தை முன்னேபாரு
தன்மயமாய் பாகமாய் செய்து கொள்ளு
சகலசித்து மாடலாம் தாக்கிடாயே
பாடல் – 29
சவுக்காரம்
தாக்கிடவே சிவன்வைத்த சவுக்காரந்தான்
தாட்டிகமாய் சொல்லிவிட்டாரன்பாய்த்தான்
வாக்கிடவே சவுக்காரம் சொன்னாள்பாரு
வகையாகவதற்கிது தான் சுருக்குமாகும்
நுணுக்கமாய்ப் பாண்டத்திலிட்டுக் கொண்டு
பாக்கிடவே கற்சுன்னம் படியுநாலு
பதிவான பாநியது படியிரட்டே
பாடல் – 30
எட்டுமே முத்தியே கரைத்துக் கொண்டு
இதமாக மூன்று நாளான பின்பு
வட்டுமே தெளிவிருத்துப் பீங்கானிலிட்டு
வடிவான உமிநேருப்பில் சுவரக்காய்ச்சி
நட்டுமே குழம்பான பதம் பதமும்பார்த்து
நலமாக வேடுத்துமே யப்பால் வைத்து
விட்டுமே சீனமாது பலமும்சேறு
விருப்பமாய்க் கரியில் வைத்துமே பொறித்துப் போடு
பாடல் - 31
சீனச்சுன்னம்
போடவே நீர்வெள்ளையாகப் போரித்துமே
கல்வதி லிட்டுக் கொள்ளு
ஆடவே சவுக்காரக் குழம்பை விட்டு
அதட்டியரைவில்லை செய்துரவியில் வைத்து
காடவேபெரியபுடம் போட்டெடுக்க
கடுங்காரஞ் சீனமாது சுன்னமாகும்
நாடவேபின் பொருக்கால்கல்வத்திலிட்டு
நலமாக வரைத்தபின்னர் காயப்போட
பாடல் – 32
போடவேகற் சுன்னம் நடுவேவைத்துப்
போருக்கவிப்படி யைந்து திறந்தான் போடு
ஓடவேயைந்து திறம் போட்டெடுத்து
ஊட்டுமே வீரமது நாலாத்தொன்று
நாடவே சவுக்காரக் குழம்பை விட்டு
நாடியரைத்துக் குகுடத்திற்
போடவேசீனமாது சுண்ணமாகும்
புதுமையாங் கவர்கேளு போக்குத்தானே
பாடல் – 33
போக்கானதாளகத்தைப் பலமும் வாங்கி
போக்கோடே கற்சுன்னம் படியும்போட்டு
வாக்கான பாநியது படியும்விட்டு
வகையான தாளகமு மதிலேபோட்டு
தாக்கான வடுப்பதனிலேற்றிக் கொண்டு
தடையரவே கமலம்போ லெரியவிட்டு
பாக்கான தலம்பியெடு தாரந்தானும்
பதியானஎண்ணெய் கக்கிச் சுத்தியாமே
பாடல் - 34
சுத்தியம் தாளகத்தை எடுத்துக் கொண்டு
சுயமான சீனத்தின் சுண்ணம் நேரே
பத்தியாய் சவுக்காரக் குழம்பினாலே
பதிவாக வரைத்துமே தாராமேலே
சுத்தியம் தடவியே கணக்காகத்தான்
முடிவாக ரவியிலிடு தினந்தான் ஏழு
சுத்தியாயச் சுண்ணாம்பாற் கவசம் செய்து
சரியான குக்குடத்திற் சுன்னாமாமே
பாடல் – 35
சுன்னமாம் தாளகத்திணீறெடுத்துச்
சுகமாக வீரத்தை யிடையே சேர்த்து
நன்மையாய் சவுக்காரக் குழம்பினாலே
நாடியரைமஞ்சளாம்  உருட்டிக்கொண்டு
பின்னமில்லைக் காய வைத்துக்கொண்டு
பிரட்டியேயதின் பேரில் சீனச்சுன்னம்
கன்னாலாய்க் கட்டியை வைத்துதானும்
கவுதாரிபுடம் போட்டேஎடுத்துக் கொள்ளே
பாடல் – 36
எடுத்ததுமே செம்புநூறென்றுருக்கி
இதமாக ஒன்றுகொடு தங்கமாக
அடுத்துமே தங்கமது ஆணியில்லை
அரிதாரமாத்துத்தா னதிக வேதை
அடுத்துமே வெள்ளிக்கு இடையேசேர்க்க
நலமான மாத்தெட்டுக் காணுங் காணும்
படுத்துவிப்தே வேதை பத்திப் பாருபாரு
பதிவான பாகத்தை யறிந்து பாரே.
பாடல் – 37
பதிந்துபார் கற்சுன்னம் பூநீராலே
பதிவான எல்லாமும்நீற்றுப் போகும்
அறிந்துபார்தாய் தகப்பனிரண்டினாலே
அளவற்றபிள்ளைகள் தான்ரெம்பவுமேவுண்டு
பதிந்துபார் சவுக்காரம்வைத்துக் கொண்டால்
கனமான திறவுகோல் மெத்தவுண்டு
பதிந்துபார் உவர்ப்பூவின் கதிரோகோடி
கணிந்தாக்கால் சித்தியாங் கணக்குமாமே
பாடல் - 38
கணக்காக வழலை என்ற அன்னத்தாலே
கனமாகவேதையது ரெம்பவுண்டு
அணக்காகப் பூநீறாலே கவரோகோடி
யணைத்திட வேசகலமுந்தான் அன்னமாகும்
மணக்காகசுண்ணத்தால் வேதைகோடி
மதிப்பான களங்குவகை கோடாகோடி
உணத்தாத தங்கத்தில் வேதை கோடி
யுற்றுநின்று பார்த்தவனே வாதியாமே
பாடல் - 39
வாதியாம் வழலை என்று மனதிலெண்ணி
வகையாகப் பிண்டத்தை எடுத்துவந்து
சேதியதாரைத்து கோடி சுன்னஞ் செய்து
சேர்த்து காரமில்லாமற் போனதாலே
பாதிமதியனிந்தாரே பொய்யென் பார்கள்
பதிவான கருத்துரைத்து வாதிங்மூடர்
சோதியாத் திறத்தாலே வழலை பொய்யாம்
சூச்திரமாந் தீட்சைவிதி யைந்நூறு பாரு
பாடல் – 40
பார்க்கவே சகலகரு வெல்லாம் தோன்றும்
பதிவான சவுக்காரச் சுன்னத்தாலே
ஏற்கனவே சுன்னமென்றால் பொய்யோவல்லா
இதமான சவுக்காரமாகு மட்டும்
தாக்கவே யேழையைப் போலிருந்து கொண்டு
தடையற்ற சவுக்காரச் சுண்ணம் பண்ணி
ஏற்கவே யெல்லாமும் நீற்றுக்கொள்ளு
இருந்திடவே முத்தியா யிருந்துபாரே
பாடல் – 41
பூரச்சுன்னம்
பகருமே சீனத்தின் சுன்னம்ரெண்டு
பதிவான பச்சை கற்பூரம் ரெண்டு
நேருமே யிவை ரெண்டும் நேகரைத்து
நிலையான சவுக்காரக் குழம்பினாலே
வாருமே வில்லைதட்டி ரவியிற்காய
வளமான புடம்போட பூரம் நீறும்
காருமே பூரத்தின் சுன்னத்தாலே
கருத்தான சகலமும்தான் நீருந்தானே
பாடல் – 42
நீறுமேதாளகத்தைச் சுத்திசெய்து
நேராகப் பூரத்தை மேலேகட்டி
ஆருமே புடம்போட பூப்போல நீறும்
அட்வான தாளாகமும் சுண்ணாமாச்சு
சேருமே வீரந்தானாலத் தொன்று
ஜெயமான சவுக்காரக் குழம்பினாலே
ஆறுமேயரைத்துமே நீலன்மேலே
அதட்டியே தட்டிரவி காயவைய்யே
பாடல் – 43
வைத்துமே குக்க்டத்தில் துரிசுநீறும்
வைகயான துரிசுநீர் நாலத்தொன்று
வைத்துமே சவுக்காரக் குழம்பினாலே
கனமாகவரைத்துமே யேமமேலே
வைத்துமே தட்டியே புடமும் போட
வகையாக பூப்போல நீரும்பாரு
நீத்துமே யம்பரமுந் தங்கமாகும்
நிலையான சவுக்காரச் சுன்னத்தாலே
பாடல் – 44 
ஆட்டான தாளகத்தின் சுன்னமொன்று
அரைத்துமே வங்கத்தின் மேலேதானும்
பூட்டாகப் பூட்டியே காயவைத்துப்
புகழாகமேல் நீறு கட்டிகாய
நாட்டாக பெரியபுடம் போட்டெடுக்க
நலமான வணக்கமது நீருமாகும்
காட்டாகக் கடுஞ்சுன்னம் வங்கச்சுன்னம்
கவர்கோடி சொல்லுகிறேன் கண்டுபாரே
பாடல் – 45
கண்டுபார்வங்கநீறு பழமெடுத்து
கனிவான நிமிளையிலே யங்கியிட்டு
பண்டுபார் புடம் போட நிமிளைநீறும்
பதிவான நிமிளையைத் தான் சவுக்காரநீரில்
கண்டுபார் அரைத்துமே புடமும் போடு
நலமாகச் சுன்னமது வாகுமட்டும்
துண்டுபார் நிமிளையது சுன்னமாச்சு
துடியாக சாரமேலப்பிடாயே
பாடல் - 46 
அப்பியேபுடம் போடச் சாரம் நீறும்
அதன்படியே சாரத்தை சவுக்கார நீரால்
நம்பியே யாரைத்துமே வில்லைதட்டி
நலமாக அடுப்ப்டுக்க வைத்துக் கொள்ளு
கப்பியே புடம் போட கடுமையாகும்
கணிவாகவெடுத்துமே சொல்லக்கேளு
தப்பிதமாய்ப் போகாமால் நாலத்தொன்று
தனிவீரஞ்சேர்த்துமே சார்புகேளே
பாடல் – 47 
கேளுமே யிதையரைத்து துரிசுமேலே
கேடிபடவே பூசியதைப் புடத்தைப் போடு
ஆகுமே துரிசியது சுன்னமாகும்
அதன்பின்னர் செய்கின்றவரிசைகேளே
தாளுமேதுரிசிநீறு நாலத்தொன்று
தளராமல் வீரமது சேர்த்தேயாட்டி
தாளுமேயேம மென்ற தகட்டிற்பூசிக்
கனபுடத்தில் தங்க நீறாயிருக்கும்பாரே
பாடல் – 48
இருக்குமே யேமந்தான் நல்லவித்தை
இதமான உப்புக்கும் காவிக்கும்காகும்
நறுக்குமே ரசவாதம் சித்தியாகும்
நல்லோர்க்கே யெப்போதுந் தப்பாதப்பா
பாருக்குமே பந்தமது விட்டுப்போகும்
பதமான ஞானமில்லை பரிசுமில்லை
வரிக்குமே மனந்தானும் நிலைக்க மாட்டார்
வந்தவித்தை யாவதென்ன சூதிற்றானே
பாடல் – 49
சுடுதென்றால் சொல்லுகிறேன் கேளுகேளு
சூதாக ஒருசரக்கை யொன்றிற் சேர்க்க
நீதியாய் பொண்ணாச்சு சேராவிட்டால்
நிர்ணயமா யொன்றுமில்லை நினைவாய்ப்பாறு
ஆதியாய்நாமந்தானாலும் பெண்ணும்
அன்பாகச் சேர்ந்து தானிருந்ததாலே
பேதியை மனிதர் தானுற்பத்தி யானால்
பிரட்டாகச் சொன்னார் களிசைவாகவே
பாடல் – 50
இசைவாகக் கர்சுன்னம் முன்னே செய்தே
யிதமானபூனிரில் எடையே கேளு
தசையாகப் பாணம்விட்டுக் கலக்கிக்கொண்டு
தாக்கியே தெளிவிறுத்துச் சரக்கில் விட்டு
விசையாக அரைத்திடவே சுன்னமாகும்
விதமான சீனத்தைச் சுன்னஞ் செய்து
இசையாகப் பச்சைக் கற்பூரஞ் சேர்த்து
இன்பமாய் போட்டிடவே சுன்னமாமே
பாடல் - 51
சுன்னமாந் தாளகத்தின் மேலே கட்டிச்
சுயமாகப் புடம் போடத் தாரம் நீறும்
அன்னமாந்தாரத்தால் வங்கம் நீறும்
அடைவான வங்கத்தால் நிமிளை சாகும்
பின்னுமாம் நிமிளையினால் சாரம்நீறும்
பேர்பெரியசாரத்தால் துரிசு நீறும்
சுன்னமாம் துரிசியினால் சூதஞ்சாகும்
கருத்துவைதால் எல்லாமே நீறிப்போகுமே
பாடல் – 52
நீரினால் பலனுண்டு வாதமுண்டு
நீராட்டால் ஒன்றுமில்லை நிலைக்காதப்பா
ஆறினாற் பாகம் நிற்கும் வாதமாகும்
அவசரத்தினின்றாலே வொன்றுமில்லை
காதம் கைக்குள்ளாசே
போரினாற் சண்டையிட்டால் வருமோவீதம்
போக்கோடே நிலைத்துமே பார்த்திடாயே
பாடல் – 53
பார்த்திடவே பலனாகும் வாதமாகும்
பாகத்தைவிட்டாக்கா லெல்லாம் போச்சு
சேர்த்திடவேசுக்கானைப் பூநீரோடே
அயமான குருவாகும் வழையாகும்
கார்த்திடடார் சவுக்கார குருவைச் சொல்வார்.
காணாட்டால் சொல்லார்கள் காடென்பார்கள்
நேர்த்தியாஞ் சவுக்காரம் வைத்தால்வாதம்
நிலைக்குமே வாதந்தான் நிலைக்கும் பாரே
பாடல் – 54
நிலைக்குமே பரந்தமண்ணும்தண்ணீரென்ற
நிலையான போதுகல்லுப்பு சுண்ணம்
வலைக்குமே பூநீறும் இரண்டும் சேர்ந்தால்
வளமான வழையென்ற பேருமாகும்
கலைக்குமே யிவிரண்டும் சேராவிட்டால்
கனிவாகலொன்றுமில்லை யெல்லாம்பொய்யாகும்
அழைக்குமே திரியாமல் வழலைபாரு
ஆதியாமுவர் மன்னினடியைப் பாரே
பாடால் – 55
அடியென்றும் முடியென்றும் கல்லுப்புச் சுண்ணம்
அடியான பூநீரே ரெண்டுமாக பிடியென்று சொல்லாது
தலைதெரித்துப் போகுமே பேசாதே பூமிநாதம்
குடியென்றும் சத்தியென்றும் நாதமாகும்
குடிகெடுத்த சாதிகளே கொள்ளை கொள்ளை
துடியாக வழலையுப்பு முன்னே பார்த்தால்
துப்புரவாய் வாதம்வந்து நிலைக்கும்தானே
பாடல் – 56
வழலை வேறு
நிலைக்குமே யின்னமொரு வழலை சொல்வேன்
நேராக ஈஸ்வரிதான் நந்திக்குச் சொன்னாள்
மலைக்குமே சவுக்காரச் சுன்னஞ் சொல்வேன்
மதியான கருவிதுதான் லகுவுமாகும்
வழலைக்குமே பூநீர் படியு னாலு
வகையாகக் கற்சுன்னம் படியுமொன்று
கலைக்குமே தண்ணீரும் படினாலு
கனிவாகக் கலக்கியே திரிநாள்வைய்யே
பாடல் – 57
வைத்துமே தெளிவிருத்துப் பீங்க்கானிட்டு
வகையாகவுமி நெருப்பிற் குழம்பாய்க்காய்ச்சி
னைத்துமே குருவாக வைத்துக் கொண்டு
நலமாகச் சொல்லுகின்ற மார்க்கங்கேளு
பைத்துமே தாளகமும் பலமுமொன்று
பதிவாகச் சுண்ணாம்பு நீரிற் போட்டு
கைத்துமே கொதியிட்டே மெடுத்துப் பாரு
கனியவே எண்ணெய் கக்கிச் சுத்தியாமே.
பாடல் – 58
சுத்தியாந் தாளகத்தை யெடுத்துக் கொண்டு
சுருக்காக அப்பிரேகம் பலமும் நாலு
முத்தியாய் வீரமதுபலமும் மொன்று
முனிவாகக் கல்வத்திற் போட்டுப் பின்பு
நத்தியாய்த் தண்ணீரை விட்டேயாட்ட
நலமாக வெண்ணையாம் நாட்டாகேளு
புத்தியாந் தாளகத்தின் மேலே பூசிப்
புதுமையாய் ரவிதனில் காயப்போடே
பாடல் – 59
போட்டுமே புடமைந்து எருமுறித்துப்
போக்கோடேயதின் மேலே சுன்னம்வைத்து
ஆட்டுமேயதின் பேரி லுண்டைவைத்தே
யடைவாக அதின் பேரில் எருமுறித்துக்
காடைபுடமாக போட்டுமே தீயைப் போடு
வாட்டு மெல்ல எடுத்துப்பார் தாரமெல்லாம்
வளமாகச் செந்தூரமாகும் பாரே
பாடல் – 60
செந்தூரந்தனை எடுத்துக் கல்வத்திலிட்டுச்
சிவப்பாக சவுக்காராக் குழம்பினாலே
யிருசாமாமதையரைத்து வில்லைசெய்து
இணக்கமாய்க் கட்டியே மேலேகேளு
செந்தூரம் அப்பிரேகம் மேலேகட்டி
நலமாக முன் போல புடத்தைப் போடே
செந்தூரமாகவே சுன்னாமாகும்
சிறப்பான சுன்னத்தின் மகிமைகேளே
பாடல் – 61
மகிமையென்ன சொல்லுகிறேன் வங்கத்தின்
மேல் வளமாகக் கட்டியே போடச்சுன்னம்
தகமையாந்துரிசின்மேலங்கி பூட்டிச்
சாதகமாய்ப் புடம் போடச் சுன்னாமாகும்
மகிமையாம் சூதத்தைக் கட்டிக்கொண்டு
மாற்றுள்ள தங்கமெடை நாகஞ்சேர்த்து
வகையாகக் கட்டினதோர் ரசமும் சேர்த்து
வகையாகக் கட்டினதோர் ரசமும்சேரு
வாகான களங்காகும் மார்க்கங்கேளே
பாடல் – 62
மார்க்கமாய் ரவி நூற்றுக் கொன்றுருக்கி
மயமாகக் கொடுத்திடாவே தங்கமாகும்
ஏற்குமே விற்றுமே செலவு செய்தே
யின்பமாய்ரனகனங்கள் பார்த்துத் தேறும்
ஆர்க்கவே செந்தூரஞ் செய்துதின்ன
அட்வான காயசித்தி யாகும்பாரு
ஏற்கவேவெகுகோடி காலம் வாழ்வீர்
ஏழைமதி போகாமலிருந்து பாரே
பாடல் – 63
தாம்பரவங்கம்
இருந்திடவேநவச்சாரம் பழமொன்று
இதமாகச் சவுக்கார குழம்பை யூற்றி
அருந்திடவேயதையரைக்க ஜலமுமாகும்
ஆகவேநெடியேறு மாட்டிக் கொண்டு
வருந்திடவே வீரமது காலுங் கூட்ட
வகையாக ரத்தம்போல் நீராய் நிற்கும்
பருந்திடவே நீரிதனி லூற்றிக் கொண்டு
பக்குவமாய் அயக்கரண்டி தன்னிலூற்றே
பாடல் – 64
ஊற்றியே கந்தகத்தைப் பொடியாச் செய்தே
யுற்றுமே சவுக்காரங் தெளிந்த நீரில்
பார்த்ததுமே போட்டு நீ கொதியிட்டாக்கால்
பதிவாக மெழுகாக எடுத்துக் கொண்டு
நாற்றிசையும் மெய்க்கவே செம்புதன்னை
நலமாகப்பல மொன்று நிறுத்துப் பின்பு
வாழ்த்தியே குகையிலிட்டேயுருகும்போது
வகையான மெழுகதனைத் தானெடையேதாக்கு
பாடல் – 65
தாக்கிடவே செம்புதானீயமாகும்
தடையரவே நோருங்குமது கல்வத்திட்டு
பார்த்திடவே வீரத்தை எடையே சேர்த்து
பச்சைத்தண்ணீர்விட்டு கரைநேராகத்
கோரிடவேமஞ்சள் போலாகும் பாரும்
குணங்கெட்ட வாதிகளே காயவைத்து
நாத்திடவே கடைநீரு விஷ்ணுமுட்டி
நலமாகவில்லை தட்டிக் காயப்போடே
பாடல் – 66
போட்டுமே அயப்பொடியும் பலமும் ஒன்று
பொருந்தவே சூதமரைப் பலமும் போட்டு
காட்டுமே பானியாலரைத்து வில்லை
காரியமாய்த் தட்டியே காயவைக்க
நாட்டுமே பூத்துமது புகைநிராலே
தாட்டுமே கல்வத்திலரை பின்பு
தடையரவே முன்வில்லை கவசம் கட்டே
பாடல் – 67
கட்டிஎவில்லையிநேடையே கட்டி காஷ்டமாய்
நூறுயெருவில் புடத்தைப் போடு
தேட்டியேஎடுத்துப் பார் செம்பாய்நிற்கும்
திறமான செம்பதனை மதியிற்றாக்கு
மூட்டியே யெட்டிரண்டு சேர்த்தே யூத
முடிவான மாற்றேழு காணும் காணும்
தூட்டியே புடமிரங்கித் தங்கமாகும்
துடியான விருதமிது நேமமாமே
பாடல் - 68
ஆமேதானிச் செம்பை எடுத்துக் கொண்டு
அடலான ஜீவனத்தைப் பண்ணித்தேறு
நாமேதான் சொல்லிவிட்டோம் வழியாய்த்தானும்
நலமான பாகமிது நாடிப்பாரு
பூமேலேயிருப்பதற்கே யிந்தச்செம்பு
போக்கோடே பார்த்தாக்கால் எல்லாமாகும்
பூவின் மேலிருக்க வென்றால் செம்பைப்பாரு
போக்கோடே சல்கலசித்தி யாடலாமே
பாடல் – 69

வெள்ளி முறை
ஆடலாம் வேல்லிமுறை யொன்றுகேளு
அடைவான சவுக்காரக் குழம்புதன்னை
வாகுமே பீங்கானில் விட்டுக் கேளு
வலுப்பமாய்ப் பாஷாணம் பலமுமொன்று
நாடவே போடித்துமே பீங்க்கானிலிட்டு
நலமாகவுமி நெருப்பிற் காயவைத்து
மூடவே கல்வத்திலரைத்து மைபோல்
முறையாக வைத்துருட்டுக் காயவையே
பாடல் – 70
வைத்துமே கர்ச்சுன்னம் படியுமெட்டு
வகையான சட்டிதனிற் பாதியிட்டு
உய்த்துமே யரைத்தவில்லை நடுவில் வைத்து
வுன்மையாய் கர்சுன்னம் மேலேமூடி
னைத்துமே அமுக்கியதைச் சட்டிமூடி
நலமான அடுப்புதன்னில் எரியிட்டாக்கால்
பைத்துமே யுருகியது வட்டாய்நிற்கும்
பதிவாக எடுத்ததுமே பாகங்கேளே
பாடல் – 71
பாகமென்ன சொல்லுகிறேன் பாஷணத்தைப்
பதிவாக வெள்ளீயந்தன்னிற் றாக்கு
ஆகமாய்டைந் துமது தூளாய்ப்போகும்
அப்பாலே வெள்ளிதன்னிலெடையேதாக்கு
யோகமற்றேயுடையுமது கல்வத்திட்டு
ஒக்கவேயிந்த எடை பாஷானஞ் சேர்த்து
ஆகவே சவுகாரக் குழம்பாலாட்டி
அடைவாகப் போடம்போட்டு மெடுத்துக் கொள்ளே
பாடல் - 72
எடுத்ததுமேயிந்த எடைச் சூதஞ்ச்சேர்த்தே
யிதமான சவுக்காரக் குழம்பைவிட்டு
நடத்தியே வில்லைதட்டிக் காயவைத்து
நலமாக வப்பிரேகம் கவசங் கட்டி
எடுத்ததுமே குக்குடத்திற் போட்டுத்தானு
மிதமாக எடுத்துப்பார் சுண்ணாமாகும்
படுத்தும் வெள்ளீயம் நூறுக்குப்
பதிவாக வொன்றிடவே வெள்ளியாமே
பாடல் – 73
ஆமேதாணிந்த வெள்ளி சரிகை போல
அடைவாகத் தானிருக்கும் வங்கந்தன்னை
காமேதான் கொடுத்தூத ஓடாதப்பா
கனமான பாஷானச் சுண்ணமார்க்கம்
ஆமேதான் செம்புதணிற் கொடுத்தாயானால்
அன்பான வெள்ளியது மார்க்கமாகும்
தாமேதான் பாகமாய்ச் செய்து கொள்ள
தடையற்ற ஞான மெல்லாங் கிட்ட்டுந்தானே
பாடல் – 74
கிட்டுமே வெள்ளிதாநெனச்வாரென்றால்
கெடியான சவுக்காரக் குழம்பினாலே
முட்டியே வெள்ளையது பாஷானத்தில்
முரியான சுண்ணாம்பு நீரினாலே
துட்டியே வெள்ளீய முடிந்ததாலே
துடியான வெள்ளியது சேர்ந்துதானே
கட்டியாமிதனாலே ரசமுஞ் சேர்ந்து
கனிவான வெள்ளியது மானவாறே
பாடல் – 75
வாறேதோவென்றாக்கால் சொல்லக்கேளு
வகையானவாதிக்கு புத்திவேண்டும்
காறேது கிபாக வரிசைவேண்டும்
கனமான சவுக்காரங் காண வேண்டும்
பார்த்து சரக்கெல்லாம் சொன்னபடியே
பதமாகும் வாதந்தாணிந்த வித்தை
தாரேதுபாகத்தை விட்டு வந்தால்
தப்பாமற் பொய்யாகும் சார்புதனே
பாடல் – 76
சார்பான சவுக்காரக் குழம்பினாலே
சகல சித்தியாடலாம் தாயே சொல்லுவாள்
பாரான சுழிமுனையினாடி பாரு
பரிவான ஞானவரும் வாதத்தாலே
சீரானகுபேரனைப் போல் வாழ்வுன்டாகும்
சித்தி முத்தியாகு மென்று நந்தி சொல்ல
காலான வழலையறியாத மூடர்
கனிவான வாதமில்லை கையிற்றானே
பாடல் - 77
இல்லையென்று போகாமல் வழலைபாரு
இதமான நற்குனத்திர் குணமும் பாரு
தொல்லையென்று குடி கெடுக்கவேண்டாம்
குணமான சாஸ்திரத்தைப் பார்த்துத் தேறு
வில்லையாய் மெதுவாகச் செய்துகொள்ளு
விருப்பமாய் வைத்துமே புடத்தைப் போடு
கொல்லி மலையலையாதே வெள்ளிபாரு
குணமாகும் நலமாகும் கூடிவாழே
பாடல் – 78
கூடவே தன்வந்திரி சவுக்காரத்தை
கூறினாரப்படி நான் கண்டு சொல்ல
நீடவேயுலகத்தில் மறைப்பில்லாமல்
நேராகச் சொல்லுகிறேன் யென்று
பாரிடவே சித்திரை வைகாசிக் குள்ளே
பரிவாகப் பொங்கியே எழுந்து நிற்கும்
ஆடவேமஞ்சளிட்டால் சிவந்து போகும்
ஆகையால் பூநீறின் மகிமைதானே
பாடல் – 79
வழலை வேறு
தானென்று பூநீரு பதக்குவாரி
தப்பாமற் கர்சுன்னம் படியும்னாலு
கொள்கையாயிதைவிட்டுக் கலக்கிப் போடு
வானின்று மூன்று நாள் வைத்துமூடி
வரிசையாய் நாலாம் நாள் தெளிவை வாங்கி
காநென்றிருத்துமே பீங்கானிட்டுக்
கனிவாகப் பொங்காமற் காய்ச்சிடாயே
பாடல் – 80
காச்சியே குழம்பான பதத்திற்றானும்
கனிவாகச் சொல்லுகிறேனுற்று கேளு
பாச்சியே வெடியுப்பு பலமோபத்து
பதிவான சீனமாது பலமும் பத்து
நாச்சியே பழச்சாறு விட்டேயாட்டி
நலமான வில்லை தட்டிப் புதுச்சட்டியிட்டு
தாக்கியே கடுமையாயெரியிட்டு காற்
றடையறவே பூப்போலச் சுன்னாமாமே
பாடல் – 81
சுன்னத்தை கலுவத்திலிட்டுக் கேளு
துடியான சவுக்காரக் குழம்பினாலே
பின்னும்மத்தை அரைத்து யெரியிட்டு வாங்கு
பிரியமாய்க் கலுவத்திலிட்டுக் கேளு
நன்னயமாய்ரைத்துமே சட்டியிட்டு
நலமாக விப்படியே யைந்து திரமெரித்து
சுண்ணம் போல வெந்துதான் சுன்னமாகும்
காரியமாம் வெடியுப்புச் சுன்னமாச்சே
பாடல் - 82
ஆச்சுதே வெடியுப்புச் சுன்னனந்தன்னை
அரன்மரைத்தார் சித்தருமே மறைத்துச் சொன்னார்
காச்சுமே தீஷைவிதி திறந்து சொன்னேன்
கனமான ஆட்டெல்லாம் வெடியுப்பாட்டு  
  தாச்சுதே யிச்சுன்னம் போலேசொல்ல
தடையரவே வாதமெல்லாஞ் சித்தியாகும்
மூச்சுமேயடங்கினால் சடம்நில்லாது.
முனையான சுழிமுனைதான் வழியிற்சேரே
பாடல் – 83
வழியோடேசென்றறிந்தால் வாதியாவின்
வழிதப்பிப் போனாலோ மார்க்கம் பொய்யாம்
சுழியோடேதமர்வாசல் வழியைக்கண்டு
சுகாதீதப்பூரணம் போற்சொக்கிப்பாரு
சுழியோடே சுன்னத்திற் புகைநீர்விட்டு
கனிவாக வைத்திடவே தயிரதாகும்
தாழியோடதயிர்தனிலே துரிசைத் தேய்த்து
தப்பாமல் ரவிதனிலே காயப்போடே
பாடல் – 84
காய்ந்தபின் சுக்கான் போற் கட்டிப்போகும்
கணக்காக வெடுத்துமேயப்பால் வைத்துக்
ஓய்ந்தபின்னொரு பலந்தான்வெள்ளீயம் போட்டு
உற்பனமாமுருகையிலே சொல்ல்லக் கேளு
ஆய்ந்தபிபு வெடியுப்புச் சுண்ணம் போட்டு
அடைவாகக் கரண்டியினால் தேய்த்துப்போடு
காய்ந்தபின்பு கடுஞ்சுன்னம் வங்கச்சுன்னம்
நலமாகக் கல்வத்திலிட்டு கொள்ளே
பாடல் – 85
இட்டுமேசவுக்காரக் குழம்புதனை
யிதமாகவிட்டரைத்தால் புடத்தைப் போடு
நட்டுமேகடுஞ்ச்சுன்னம் வங்கச்சுன்னம்
நலமாகவெடுத்துமே வீரம்போட்டு
பட்டுமே சவுக்காரக் குழம்பினாலே
பதிவாக அரைத்துமே நீலன்மேலே
எட்டுமேயங்கியது குளிசங்கட்டி
யித்தமாகக்குக்குடமாய்ப் போட்டுக்கொள்ளே
பாடல் – 86
போட்டுமேஎடுத்திடவே துரிசுநீறும்
பேரன்டம்ஷனந்தனிலே நீறிபோகும்காட்டுமே
சரக்கெல்லாம் சொன்னபடிகேட்கும்
கடுங்காரம் துரிசியினாலெல்லாமாகும்
மூட்டுமே சகலதுறை யித்துக்குள்ளாகும்
மூதண்டசூத்தை மூட்டிக்கொள்ளும்
நாட்டுள்ளோர் காணார்கள் துரிசுநீறு
நானறைந்துவுலகத்தில் நாட்டினேனே
பாடல் - 87
நாட்டினேன் முன்வைத்த துரிசுதன்னை
நலமாக விராகனெடை தூக்கிக்கொண்டு
காட்டுமே விராலியிலை குள்ளேயிட்டுக்
கனிவாகலமழ்த்தி வைக்கஜலமதாகும்
தேட்டையா ஜலமிறுத்துக் கரண்டியூதத்
திறமாக சூதத்தை யதிலேவிட்டு
வாட்டுமே கொதியிடவே கட்டிப்போகும்
பரிவாக மத்தங்காய் தனிலேவையே
பாடல் – 88
வைத்துமேபுடம் போட்டேயெடுத்துப்பாரு
வகையாகதந்தம் போல்மணியுமாகும்
சேர்த்துமே சூதமணி கண்டபோதே
சிறப்பாக சகல பலனுடனேயாகும்
நாத்துமேநாதாக்கள் மறைத்துப்போட 
நலமானசவுக்கார வழலைதன்னை
சீர்த்துமேதீஷைவழி திறந்துசொன்னேன்
சிறப்பாகசூதமென்ற மனியைத்தானே
பாடல் – 89
மணியானசூதம்நின் றுருகும்போது
மாட்டுமேயொன்றுக்கு நாலுதங்கம்
கனிவாகத்தங்கமெடை நாகாம்போட்டு
கனிவான நாகத்தைக் கட்டிக்கேளு
துடியானவெடியுப்பு ஜெயநீர்தன்னில்
துப்புரவாயுருக்கியே சாய்த்துப்போடு
கணியானநாகமது மணியுமாகும்
காட்டிடவேதங்கத்தில் சமனாய்சேரே
பாடல் - 90 
சேர்த்துமேயுருக்கிடவே களங்குமாகும்
ஜெயமான களங்கத்தைச் செம்புநூறில்
ஆர்த்துமே கொடுத்திடுமே திசைமாற்றாகும்
அட்வானகளங்கத்தைச் செந்தூரஞ்செய்ய
பார்த்ததுமே கலுவத்திலிட்டுக் கேளு
பதிவாகவுடைத்துவைத்து யுரைநீராலே
நார்த்துமே யரைத்துமெடை மேருதன்னில்
நலமாக வடைத்துமே சொல்லக்கேளு
பாடல் – 91
கேளுமேசட்டியிலே மணல்தானிட்டுக்
கிருபையாதன் பேரில் மேருவைத்து
நாளுமேகழுத்தளவு மணலையிட்டு
நலமாகத் தீயெரிக்கச் சொல்லக்கேளு
வாழுமே கமலமுதல் காடாக்கினிதானும்
வகையாகப் பனிரெண்டுஜாமம் போட்டு
ஏழுமேயாறவிட்டு மெடுத்துப்பாரு
இதமான செந்தூர மானவாறே
பாடல் – 92
வாருங்கான் செந்தூரப் முருக்கம்பூபோல்
வகையாகநவலோகந் தன்னிலோட்டங்
காருகேள் திசைமாற்று மாகும்பாரு
கணக்காகமண்டலந்தான் தேனிலுண்ண
தாருகேள் நோவெல்லாந் தவிடுபொடியாக்கும்
தாட்டகமாய்நோய்மூன்றுஞ் சிதறிப்போகும்
பாருகேள்காயசித்தி யுடனேயாகும்
பத்தியாயுலகத்திற் பதிவாய்நில்லே
பாடல் – 93
நில்லென்றுசவுக்காரச் சுண்ணம்வைத்து
நிலையானதுரிசிநீர் தன்னைநீற்று
கல்லென்றுசூதமத்தை கட்டிக்கொண்டு
கணக்காகவெடியுப்புச் சுன்னம்வைத்து
தில்லைனாட்டரைப்போ லிருந்துவாழ்வீர்
ஜெகமெல்லாம்ஞானங்கள் மிக்கவுமாகும்
கல்லையென்றுபாகமாய்ச் செய்துகொள்ளே
கருத்தானரசவாத மாகும்பாரே
பாடல் 94
வாதமாம்வெடியுப்புச் சுன்னத்தாலே
வகையாக வுற்றுமே பார்த்தபேர்க்கு
நாதமாம்பூநீற்றை விட்டாயானால்
நலமானபலனில்லை நாடிப்பாரு
நாதமாமிவைரெண்டால் வாதமாச்சு
கல்நென்றுவிட்டாக்கால் எல்லாம்போச்சு
நீதமாய்த்துரிசதனை நீற்றாவிட்டால்
நிலைக்காது வாதம்முதல்நீற்றலாச்சே
பாடல் – 95
ஆச்சென்றுநினைக்காதே சவுக்காரத்தை
யான்மையாய்நீற்றியே வேதைபாரு
மூச்சென்றவாதமெல்லாம் கைகுள்ளாகும்
முடியுமட்டும்வாதமெல்லாஞ் சோதித்தேறு
பாச்சென்றுநில்லாதே பலனேயில்லை
பண்பாகமார்கமதைப் பணிந்துபார்க்க
காசசென்றவுலகத்தில் ஞானமாகும்
கைகண்டபொருளிது தான்வாதமாமே
பாடல் – 96
வாதந்தான் செய்யும்வகை யருமையல்ல
வாய்திறந்து பேசாமல் வழலைபாரு
நீதந்தான்தவறினால் பலிக்காதப்பா
நெரியையுற்றுப்பெருமையாய் பண்ணிக்கொள்ளு
வேதத்திலுற்றபடி சொல்லிவிட்டேன்
வேதாந்தம் வேதாந்தம் இரண்டும்மொன்று
நீதமாய்ச்செய்தால் பலனுமாகும்
நிகழ்காலமெல்லாந் தானிருப்பதமே
பாடல் – 97  
இருக்கவேசவுக்கார வழலைதன்னை
யிதமாகச்செய்திடவே முத்தி முத்தி
மருக்கவேவழலைதன்னை மறந்ததாலே
மலையானசரக்கெல்லா மோடிப்போகும்
முருக்கம்பூப் போலவேசிவப்புமேற்று
முக்கியமாய்ச்சாய்ந்தான் மிகவேயேறும்
அருக்கன்போல்சிந்தூரம் செய்துபாரு
ஆதியானவழலையென்ற ஆதிதானே
பாடல் – 98
ஆதியாம்வழலைதன்னை முன்னேசெய்து
அட்வானதுரிசியதைப் பின்னேசெய்து
வேதியாம்ரசங்கட்ட வாதமாகும்
பிரபலமாய்வாதமெல்லாம் மெளிதாகும்
நீதியாய்ப்பார்கிலிது வுயர்ந்தவித்தை
நிச்சயமாம்மார்க்கமாய்ச் செய்துகொள்ளு
சோதியேயனுவனுவாய்ச் சோதித்தேறு
குனமாகவாதமெல்லாம் குறுக்குமாமே
பாடல் – 99
குருக்காகதன்வந்திரி சவுக்காரத்தை
கூறினாரெல்லோருக்கும் தெரியத்தானும்
முறுக்காகசவுக்கரங் கண்டபேர்கள்
முனிவாகச்சொன்னாக்கால் ரவிகோடினரகம்
வருத்தமாய்வெகுபாடு பட்டுத்தேறி
வகையானசவுக்காரங் கண்டுதேறி
உருத்தாகவழலையென்ற ஆட்டுத்தானே
உத்தமனார்யூகிமுனி நூறுந்தானே
பாடல் – 100
இத்துடன் யூகிமுனிவர் அருளிசெய்த நூறு முடிவு பெற்றது இதை பாடிக்கும் அன்பர்கள் எதையும் பகுத்தறிந்து சித்தர்களின் உண்மையான எண்ணம் இவற்றை இயம நியம விதிகளுக்கு உட்பட்டதா என்றும் மற்று வேறு சித்தர்களின் நூல்களையும் ஒப்பிட்டு வாதத்தில் இறங்கவும் மற்றும் இத்துடன் அக்கீம் அப்பதுல்லா சாயபு அவர்களின் பின் இணைப்பாக வெளியிட்டு உள்ள நந்திதேவர் அருவகைநீர் திராவகம் பார்ப்போம்  
நந்திதேவர் அறுவகைநீர் திராவகம்  
அகாரமும் உகாராஞ்சேர்ந்தால் ஆனந்தமாப்போல்
மகாரத்தில் சோதிபாதம் மன்னியேதருவதென்று
நகராத்திலுதித்த சித்தன் நாடியிரையருளினாலே
வாகராத்திலெவர்க்ஞ் சொன்னவழிகளையறிகுவீரே
பாடல் – 1
அறிவினால்வெள்ளையான ஆயிலைபூநீரொன்று
பிரிவிலாக்கம்பியுப்பு பேசாமலிடைதாநென்று
முறியாமல்ரெண்டும்மொன்றாய் மூட்டியேசாமமாட்டி
உரியோடும்வெண்ணெய்போல் உருக்கினால்வட்டாய்போம்
பாடல் – 2
வட்டைநீகலவத்தாட்டி வழியாகக்குழிக்குள்ளேவை
சட்டமாய்க்குழியைமூடி சமாதிவைத்துசலம்தெளிக்க
எட்டுநாள்பொறுத்துமெள்ள எடுத்திடுசிவந்தநீரை
கட்டமேதீரவென்று கருதியேதீபமீயே
பாடல் – 3
கருதியேதீபதூபம் காட்டிட்டுதேவர்க்கப்பா
சுருதியேசொன்னதிந்த துரிதமாய்புட்டிக்கிட்டு
அரிதானதொழிலுக்குகெல்லாம் அமர்ந்திடவார்த்தரைத்து
பெரிதானரவியிற்போட பிரண்டுதான் சுன்னாமாச்சே
பாடல் - 4
ஆமெனவஸ்துநாலும் அடைவுடன்தனிச்சரக்குந்
தாமெனத்தொந்தித்தந்த தப்பிநீர்நிறையவிட்டு
ஒமென்றரவியிற்போட உலர்ந்திடஎட்டுக்குள்ளே
சாமெனும்முன்னோரெல்லாம் தாக்கினார்சாகும்பாரே
பாடல் – 5
சாகுமேயிந்தநீரால் சதாசிவன்பாதந்தனை
ஆகுமேசுன்னமெல்லாம் அடைவுடன்புடமுந்தீர்ந்தால்
வேகுமேநவலோகங்கள் வெறிகொண்டஆத்தாள்நீரில்
போகுமேஅண்டரண்டம் புந்தியாலுதித்துக்கானே
பாடல் – 6
காணென்றமூடருக்குக் கபடத்தைநீக்கவேண்டி
ஆணென்றபிள்ளைகட்க்கு அதிசயஞ்சொள்ளகேளீர்
தாணுவாம்வீரங்கானும் தனிச்சீனங்காலும்கூட்டி
பேணுவாம்ரசகற்பூரம் பின்னுங்கால்கம்பியுப்பே
பாடல் – 7
கம்பியோடிவைநாலுக்கும் கனம்பெறநாற்காலொன்று
வெடியுப்புச்சுண்ணம் விபரமாயுருகிகண்டாய்
தம்பியாயிடையொன்றப்பா தாக்கிடநெகிழ்ந்துவில்லை
நம்பியேரவியிற்போட நலம்பெறகாய்ந்துபோமே
பாடல் – 8
காய்ந்தபின்புடத்திலப்பா கண்டந்தநீரெடுத்து
ஆய்ந்திடவந்திடைக்கி அந்தமாம் ரசத்தைச்சேர்த்து
மாய்ந்திடஅரைத்துமூன்று நாளதனில்அரைத்துவாங்கில்
மாய்ந்திடவெய்யிற்கண்டால் மடிந்துபோம்அருநீர்போக்கே
பாடல் –
அறுநீரேகுருவதாகும் அந்தந்தத்துறைகட்கெல்லாம்
பிரிந்திடாதிந்தவேதை பேச்சில்லைசொல்லப்போகா
உரிந்த்துபோம்சட்டைதள்ளி உயர்ந்திடசோதிகானும்
சரிசரிஎன்றுசொல்ல சராபுமேவணங்குவானே
பாடல் - 10
வணங்குவானின்னமொன்று வகையினை சொல்லக்கேளு
பிணங்காமல்ரசிதபோகம் பேணியேமுன் போற்சேர்த்து
இணைக்காதகல்வத்திட்டு எடுத்திடுமூன்றுநாளில்
குணங்கானும்ரவியிற்போட்டால் கும்பிட்டுநீரில் போமே
பாடல் – 11
போகுமேநவலோகத்தில் புனிதமாய்வேதைகானும்
ஆகுமேயினங்கள்கண்டு அறிந்திடுவேதைபாரு
சாகுமேதிராவகத்தால் சண்டாளவூறல்போகும்
வேகுமேலடுபிலையா விநோதமுமெத்தக்கானே
பாடல் – 12
மெத்தவேரசிதவங்கம் விளங்கிடுசொர்ணமுண்டு
சித்தமாய்முன்போல்செய்ய திட்டாமாய் சொல்லிவிட்டேன்
சுத்தனாய்க்கண்டுகொண்டு கள்ளருக்குகுரைசெய்யாதே
புத்தியிலடக்கம்வைத்துப் புனிதனாயிருக்கலாமே
பாடல் - 13 
இருக்கவே தங்கமொன்று இதமான கட்டுவங்கம்
உருக்கலாம்சரியாய்ச்சேர்த்து ஒவ்வியேகளங்கமாகும்
பெருக்கலாம் ரசமுமொன்று பேசாமல்சேர்த்தரைத்து
செருக்கலாம்களஞ்சிவீதஞ் சேர்த்திடுசாரகாரம்
பாடல் – 14
காரமும்முன்போல்வீதம் கண்டுதான்சேர்த்துமாட்டு
ஆறமும்வேண்டுமோசொல் அந்தநீர்தன்னைக்கண்டால்
ஓரமாய்ச்சொன்னநல்ல உற்றுநீபார்த்துக்கொள்ளு
வாரமுமூன்றுநாளில் மாண்டிடுங்குப்பிக்கேற்றே
பாடல் – 15
எற்றியகளங்கஞ்செய்ய இன்னமும்சொல்வேன்கேளு
மாற்றியேவெள்ளிபொன்னு மறுவங்கம்பொன்னுமாகும்
நேற்றியேரண்டுஞ்சேர்த்து நிசமதாயுருக்கிச்சேரு
ஆற்றியேபொடித்துக்கொண்டு அந்தமாய்ரசத்தைச்சேரே
பாடல் - 16 
சேரேநீமுன்பொழிந்த திட்டமாய்ப்பஞ்சபூதம்
தீரனாய்சேர்க்கைசேர்த்து திட்டாமாயரைத்துநீரில்
காரென்னுங்குழவினுள்ளே கண்டதிச்சேதி சொன்னோம்
பூரமும்வீரந்தானும் புகழ்ந்திடும்வேதைகாட்டும்
பாடல் – 17
காட்டுமேசெம்புமொன்று கருதிய வங்கமொன்று
மாட்டுமேரெண்டுஞ்சேர்த்து மங்காதுகளங்கமாகும்
ஆட்டுவாய்ரசமொன்றிட்டு அமைந்திடவரைத்துகாட்ட
நாட்டுவாய்பஞ்சபூதம் நலம்பெறமூட்டிநீட்டே
பாடல் – 18
நீட்டேன்றேன்வீரங்கால்தான் நிசமான பூரங்கால்தானே
காட்டென்றேன்கம்பிரெண்டு கால்தனைநன்றாய்பாரு
ஊட்டுவாய்சீனங்கால்தான் உத்தமகரியுப்பேகால்
வாட்டமாயறுநீராலே வகைதப்பிஎரித்திடாயே
பாடல் – 19
பருதியில்பொறியைப்போல் பாரிந்தவேதைசொல்லும்
திரித்திடும்சாமுமையா சிக்கெனவெழுந்துபேசும்
மரித்திடுமயன்தன்னை மகிழ்வுடன்பூசிப்போமால்
உரித்திடும்வயதுபத்தும் உத்தமபோன்னிதாமே
பாடல் – 20
பொன்னென்றுசொன்னபேச்சு பொருந்திநீயாலோசித்து
வன்னமாய்ச்சொல்லக் கேளுவரிசையையரைகிறேன்பார்
சுன்னாமாம்கரியுப்பொன் றுகருதியசீனமொன்று
மன்னனேரெண்டுகம்பி மதித்திடும்கற்சுன்னாம்பே
பாடல் – 21  
சுன்னமாமுருக்கினத்தின் துறையறிந்துருவைக்கான
சுன்னவேமூன்றுநாளில் கருதியபுடமும்தீர்ந்து
நன்னாவேரசிதம்நாகம் நலமாதாய்ச்சேர்த்துக்கொண்டு
அண்ணாவேயிடைக்கிடைக்கு மமர்ந்திடஅரைத்திடாயே
பாடல் – 22
அரைத்திடுஅறுநீராலே ஆய்ந்திட்டுச்சுன்னமாகும்
எரித்திடில்லகுபுடத்தில் இதமாகவேகமீறும்
நிறைத்திடநல்லோகத்தில் நேமித்தவயதுபத்து
உரைத்திட்டேன்உலகிலுள்ள உபாயத்தைச்சொல்லென்னாதே
பாடல் -  23
சொல்லோண்ணாதிந்தசேதி சுருதியையுத்துப்பாரு
வெல்லோன்னாவேதைகானும் விரும்பியேநன்றாய்க்கேளு
கொல்லோன்னாதங்கமொன்று குவலயவங்கமொன்று
நில்லொன்னாகளங்கம்போல நேமித்துவுருக்கிவாங்கே
பாடல் – 24
வாங்கிப்பின்ரசத்தையொன்று வழமைதாய்க்கூட்டியாட்டி
ஓங்க்கியபங்கஞ்சாக்கி யுள்ளதுசொல்லக்கேளு
தாங்கியேசெய்தசுன்னந் தானதுஅஞ்சுபங்கு
ஏங்கியேபோகாமல்தான் இயம்பியஅறுநீராலே
பாடல் – 25
அறுநீராலாட்டியாட்டிஅமர்ந்திட மூன்றுநாள்தான்
சரிபெறபரியில்போட்டு தாக்கிடுலகுபுடத்தில்
கறியுறஅனலில்வாட்டிக் கனம்பெறஅப்பிலாகில்
உரியதாய்ச்சொன்னஞ்செய்து உத்தமசெம்பிலீயே
பாடல் – 26
செம்பினிலீந்தாலுந்தான் செகசோதிகாணுங்காணும்
வம்பினில்வெள்ளிமேலே வரிசையாய்ச்சோதிகானும்
தம்பினிவரியாவெள்ளித் தருசெம்புரண்டும்சேர்த்து
உம்பிலன்குருவொன்றிட்டு உருக்கியேஎடுத்திடாயே
பாடல் – 27
எடுதிடாய்எந்தலோக மாகிலும்வரிசையீது
அடுத்திடாயெந்தச்சுன்னம் மாகிலுமறியச்செய்வார்
தொடுத்திடாய்முறைதப்பாமல் சொன்னதுபஞ்சபூதம்
கொடுத்திடாய்சுன்னஞ்செய்து குரியதுபத்துக்குகொன்றே
பாடல் – 28 
ஒன்றைப்போல்முறைகள்சொல்ல உயர்ந்திடும்லஷங்காப்பு
அன்றன்றுமுரைத்தார்முன்னோர் திலத்தில்விபரமெத்த
கண்டுதேறுதேறு கருதியஉப்புக்கட்டை
நன்றதாங்கெந்திசேர்த்து நலம்பெறபுடத்தில்வாங்கே
பாடல் – 29
வாங்குவாய்ப்புடமூன்று வர்ணமோசிகப்புமாச்சு
ஏங்கிநீபோகாமற்கேள் இயங்கியரசமேசேரு
தாங்கியேகுப்பிக்கிட்டு தயவதாய்யெரித்துப்பாரு
ஓங்கியேவந்துபோமே உத்தமகுருவென்றேன்னேனே
பாடல் – 30
எண்ணியகருதியெல்லாம் இயம்பியவகையைக்கேளு
சண்ணியேஉப்பும்அப்பும் தயவதாய்ச்சேர்க்கச்சொல்லி
நண்ணியேமுன்னோர்சொன்ன நலமாதையறிந்தீரானால்
மண்ணிலேபிறந்தசென்மம் மண்ணிலேபடிந்துபோமே
பாடல் – 31

நந்தி தேவர் அறுவகைநீர் திராவகம் வாகாரக்குறிப்பு முப்பத்திஒன்று  முற்றியது.                       

No comments:

Post a Comment